EVENTS

MS University Atheletic Meet Championshiop 2021(Both Men and Women)

4th Consecutive victory

31வது     மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான தடகள போட்டி கடந்த 17.12.2021 (வெள்ளிக்கிழமை) முதல் 19.12.2021(ஞாயிற்றுக்கிழமை) வரை பாளையங்கோட்டை அண்ணா ஸ்டேடியத்தில் வைத்து ஏறத்தாள 60க்கும் மேற்பட்ட ஆண்கள் அணிகளும் ,50க்கும் மேற்பட்ட பெண்கள் அணிகளும், 1300 மேற்பட்ட தடகள வீரர் வீராங்கனைகள் கலந்து  கொண்ட  மாபெரும் தடகளப் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் கடந்த  மூன்று வருடங்களாக தொடர்ந்து சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ள நமது சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி  20 தடகள வீரர்கள், 9 வீராங்கனைகள் உடன் தடகள போரில்  இதில் கலந்து கொண்ட

ஆண்கள் பிரிவில் :-     
 9 - தங்கப் பதக்கமும்,
 9 - வெள்ளி பதக்கமும் 
2 -  வெண்கலப் பதக்கங்களுடன் இந்த ஆண்கள் பிரிவில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பெற்று உள்ளது.

பெண்கள் பிரிவில் :- 
6 - தங்கப்பதக்கம்,
2 - வெள்ளி பதக்கம்,
4 - வெண்கலப் பதக்கங்களுடன் இந்தப் பெண்கள் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்று உள்ளது.

மேலும் நமது சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி  மட்டுமே இரு பிரிவிலும் அதாவது ஆண்கள் பிரிவிலும், பெண்கள் பிரிவிலும் ஒரே கல்லூரியில் இருந்து தொடர்ந்து நான்கு வருடங்கள் சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்று   மனோன்மணியம்  சுந்தரனார் பல்கலைக்கழக தடகள போட்டியில் பெரும் வரலாற்று சாதனை படைத்துள்ளது.

Back to Top