தமிழ்த்துறை




Activities - (2019-2020)

இக்கல்வியாண்டின்முதற்பருவத்தில் 18.07.2019 அன்று மாலை 3.30 மணிக்குதமிழ்ப்பேரவைத் தொடக்கவிழா நடைபெற்றது.திரு.க.ராஜகிருஷ்ணன் (ஓவியர்மற்றும்கலைஆசிரியர்,திஒயிட்பன்னாட்டுப்பள்ளி,துபாய்) சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கலைநாடும்மனம் என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

நம் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் 9.08.2019அன்று மாலை 3.30 மணிக்கு சிறப்புச்சொற்பொழிவுநடைபெற்றது. நிகழ்வில்எழுத்தாளர் திருமதிஅல்லிஃபாத்திமா(தமிழாசிரியை.,குமிழிஅரசு மேல்நிலைப்பள்ளி,) அவர்கள்பாண்டிச்சிநாவலைமுன்வைத்துபுதினப்பெருவளிஎன்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

நம் கல்லூரியின் தமிழ் இலக்கிய மாணவர்கள் தாமாகவே முன்வந்து ஆசிரியர்களுக்காக ஒரு நிகழ்வு நட்த்த வேண்டும் என எண்ணி 9.09.2019 அன்று மாலை 4.30 மணிக்கு ஆசிரியர் தினவிழாவை நிகழ்த்தினர்.விழாவில் பேராசிரியர் அந்தோனி சுரேஷ் தலைமையில் இளையோர் சமுதாயத்தை பெரிதும் சீர்படுத்துவது ஆசிரியர்களா? பெற்றோர்களா? என்னும் தலைப்பில் சிறப்புப்பட்டிமன்றம்நடைபெற்றது. தமிழ்இலக்கிய மாணவர்கள்இருஅணிகளிலும்பேசினார்கள்.

நம் கல்லூரியின் இருதமிழ்த்துறைகளும் 13.09.2019 அன்று மாலை 3.30 மணிக்கு மகாகவி பாரதியார் நினைவு தின சிறப்புச்சொற்பொழிவை நட்த்தின. நிகவில் திருமதி ஜா.தீபா (பத்திரிகைஆசிரியர் மற்றும்மொழிபெயர்ப்பாளர்) அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுபரந்து விரியும்ஊடகவானம் என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

ஜெர்மனியின் தமிழ் மரபு அறக்கட்டளையுடன் நம் கல்லூரியின் இருதமிழ்த்துறையும் இணைந்து 04.10.2019 அன்று தொல்லியல் நோக்கில் உலகத் தமிழர் பண்பாடு என்னும் தலைப்பில் பன்னாட்டுக்கருத்தரங்கை நடத்தின.கருத்தரங்கில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.ஸ் அதிகாரி திரு,ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இக்கல்வியாண்டின் இரண்டாம்பருவத்தில் உலக தாய்மொழி நாளை கொண்டாடும் விதமாக நம் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பாக உலக தாய்மொழி நாள் சிறப்புச்சொற்பொழிவு 21.02.2020அன்று காலை 10.15மணிக்கு நடைபெற்றது. இச்சொற்பொழிவில் அருவிப்பொழிஞர்திரு.வி. செந்தில்நாயகம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தமிழுக்கும் அமுதென்றுபேர் என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

நம் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் 10.03.2020அன்று மாலை 3.15மணிக்கு சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது. நிகழ்வில் எழுத்தாளர் திரு. நீலன் (கவிஞர்,திரைப்படஇயக்குநர்)அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு படைப்பென்னும் அருங்கலை என்னும் தலைப்பிலும் தொல்லியல் ஆர்வலர் திருமுத்தாலங்குறிச்சி காமராசு அவர்கள் ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வுகள் என்னும் தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள்.




Back to Top