தமிழ்த்துறை




Activities - (2020-2021)

14.9.2020 அன்று நம் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பாக மகாகவி பாரதியாரின் நினைவேந்தல் சிறப்புபட்டிமன்றம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் மு. முகம்மது சாதிக் தலைமையுரை ஆற்றினார். இயக்குனர் முனைவர் அ. அப்துல் காதர் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச. மகாதேவன் அனைவரையும் வரவேற்றார். அரசு உதவி பெறாப்பாடங்களின் தமிழ்த்துறைத்தலைவர் மு. சாதிக் அலி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பாரதி கண்ட பெண் முன்னேற்றம்கனவா? நினைவா ? என்றத் தலைப்பில் இணைய வழியில் பட்டிமன்றம் நடைபெற்றது. தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் அந்தோணி சுரேஷ் நடுவராக அமர்ந்து நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மாணவர்கள் முத்துமாலை, இந்து, பேச்சிமுத்து, ஆகியோர் பாரதி கண்ட பெண் முன்னேற்றம் கனவே என்ற தலைப்பிலும் மணிகண்டபிரபு, ஆகியோர் பாரதி கண்ட பெண் முன்னேற்றம் நினைவே என்ற தலைப்பிலும் பேசினர். 15 .10. 2020 அன்று நம் கல்லூரி தமிழ்த்துறை சார்பாக அப்துல்கலாம் அவர்களின் பிறந்ததினவிழா நிகழ்ச்சி இணைய வழியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் மு. முகம்மது சாதிக் தலைமை உரையாற்றினார். கல்லூரி இயக்குனர் முனைவர் அ.அப்துல் காதர் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்ததுறைத் தலைவர் முனைவர் மகாதேவன் நோக்க உரையாற்றினார். தொடர்ந்து மாணவிகளின் சிறப்புநிகழ்ச்சிகள் நடைபெற்றன தமிழ்த்துறைப் பேராசிரியர் சாதிக் அலி அனைவருக்கும் நன்றி கூறினார். 13. 10. 2021 அன்று நம் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பாக வாக்காளர் விழிப்புணர்வு விழா நடைபெற்றது. இந்திய தேர்தல் ஆணையம், மாவட்ட தேர்தல் ஆணையம், மற்றும் சதகத்துல்லாஹ் அப்பா கல்லூரி ஆகியவை இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தின. இந்நிகழ்ச்சிக்கு துணைஆட்சியர் (பயிற்சி) செல்வி மகாலட்சுமி சிறப்புரை வழங்கினார். மாவட்ட வாசகர் வட்டத்தலைவர் முனைவர் கோ. கணபதி சுப்ரமணியன் அனைவருக்கும் நன்றி கூறினார்


Back to Top