தமிழ்த்துறை




Activities - (2022-2023)

சீதக்காதி தமிழ்ப் பேரவைத் தொடக்கவிழா 13.09.2022

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் அரசு உதவி பெறும் மற்றும் அரசு உதவி பெறா ஆகிய இரு தமிழ்த் துறைகளின் சார்பாக சீதக்காதி தமிழ்ப் பேரவைத் தொடக்க விழா 13.9.202 அன்று நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ் த.இ.செ. பத்ஹ{ர் ரப்பானி அவர்கள் தொடக்க உரையாற்றினார்கள். கல்லூரி முதல்வர் முனைவர் சே.மு. அப்துல் காதர் மற்றும் துணை முதல்வர் முனைவர் எஸ்.எம்.ஏ செய்யது முகம்மது காஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்த் துறை தலைவர் முனைவர். ச.மகாதேவன் அறிமுக உரையாற்றினார். தமிழ்த் துறை இணைப் பேராசிரியர் முனைவர் அ.மு. அயூப்கான் அனைவருக்கும் நன்றி கூறினார்.

மாணவர் வாசகர் வட்ட நூல் அறிமுகம் மற்றும் திறனாய்வு நிகழ்ச்சி 09.11.2022

திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தமிழ்த்துறையின் சார்பாக மாணவர் வாசகர் வட்ட நூல் அறிமுகம் மற்றும் திறனாய்வு நிகழ்ச்சி 09-11-2022 அன்று பிற்பகல் 02.15 மணியளவில் நடந்தது. நிகழ்வில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மனநலத்துறை தலைமை மருத்துவர் டாக்டர். ராமானுஜம் “வாசிப்பும் மனநலமும்” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் சே.மு.அப்துல் காதர் தலைமை உரை வழங்கினார். கல்லூரி துணை முதல்வர் முனைவர் எஸ்.எம்.ஏ. செய்யது முகம்மது காஜா வாழ்த்துரை ஆற்றினார். தமிழ்த் துறை தலைவர் பேராசிரியர் ச.மகாதேவன் வரலாற்று ஆய்வாளர் திவான் அவர்கள் எழுதிய மதுரா விஜயம் என்னும் நூல் குறித்து அறிமுக உரையாற்றினார். நிகழ்ச்சியில் மாணவிகள் கீர்த்தனா> வித்யா> சிவப்பிரியா> ரம்யா> சுடர் அரசி> ஆகியோரும் மாணவர்கள் சேக் மைதீன்> வெயிலுகந்த பெருமாள்> சிவ கணேசன்> அபிஷேக்> மாடசாமி> ஆகிய பத்து பேரும் தங்களுக்கு விருப்பமான புத்தகங்களை வாசித்து திறனாய்வு செய்தனர். பேராசிரியர் ஆமினா பானு நன்றி கூறினார். முனைவர்பொன் சக்தி கலா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

மகாகவி பாரதியின் நினைவு நூற்றாண்டு கருத்தரங்கம் 14.11.2022

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் தமிழ்த்துறை சார்பாக 14.11.2022 அன்று மகாகவி பாரதியின் நினைவு நூற்றாண்டு கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் சே.மு. அப்துல் காதர் தலைமை உரை வழங்கினார். துணை முதல்வர் முனைவர் எஸ்.எம்.ஏ செய்யது முகம்மது காஜா வாழ்த்துரை வழங்கினார். தமிழ்த் துறை தலைவர் முனைவர். ச.மகாதேவன் அறிமுக உரையாற்றினார். மேற்கு வங்க அரசின் மேனாள் கூடுதல் தலைமை செயலாளர் திரு பாலச்சந்திரன் இ.ஆ.ப அவர்கள் மண்ணின் மைந்தர் மகாகவி பாரதி என்னும் பொருண்மையில் சிறப்புரையாற்றினார் தமிழ்த் துறை இணைப் பேராசிரியர் முனைவர் அ.மு.அயூப்கான் அனைவருக்கும் நன்றி கூறினார்.

சீதக்காதி தமிழ்ப்பேரவை மாணவர் பேரவையுடன் இணைந்து நடத்தும் பொங்கல் பட்டிமன்றம் 03.01.2023

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தமிழ்த் துறை மற்றும் மாணவர் பேரவை இணைந்து 3.1.2023 அன்று காலை 10 மணிக்கு கல்லூரி கலையரங்கில் பொங்கல் பட்டிமன்றம் நடத்தியது. நிகழ்ச்சிக்கு கல்லூரத் தாளாளர் அல்ஹாஜ் த.இ.செ.பத்ஹ{ர் ரப்பானி தொடக்க உரையாற்றினார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச.மகாதேவன் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் சே.மு. அப்துல் காதர் வாழ்த்துரை வழங்கினார். துணை முதல்வர் எஸ்.எம்.ஏ. செய்யது முகமது காஜா நன்றி உரையாற்றினார். பேராசிரியர் பொ.செ. பாண்டியன் நடுவராக அமர்ந்து தீர்ப்பு வழங்கினார்.

சீதக்காதி தமிழ்ப்பேரவை மாணவர் பேரவையுடன் இணைந்து நடத்தும் பொங்கல் பட்டிமன்றம் 03.01.2023

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் இன்று (15.02.2023) சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது. நிகழ்ச்சிக்குக் கல்லூரி முதல்வர் முனைவர் சே. மு. அப்துல்காதர் அவர்கள் தலைமைத் தாங்கினார். கல்லூரித் துணை முதல்வர் முனைவர் செய்யது முகமது காஜா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ஜோதி முருகன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு "ஆற்றுப்படையில் கலைஞர்கள்" எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். தமிழ்த்துறைத் தலைவர் சாதிக் அலி அவர்கள் அனைவரையும் வரவேற்றார். பேராசிரியர் அனுசியா நன்றி கூறினார். பேராசிரியர்கள் முனைவர் மாலிக்> முனைவர் செல்வ சுகன்யா> முனைவர் அந்தோணி சுரேஷ், முனைவர் பார்த்திபன்> முனைவர் பொன் சக்தி கலா> முனைவர் பாத்திமா> ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

அரபு மொழியில் நூல் வெளியீட்டு விழா 18.02.2023

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் தமிழ்த் துறை 18.02.2023 அன்று காலை 10:30 மணிக்கு சதாவதானி செய்குத்தம்பி பாவலர் அறக்கட்டளை சொற்பொழிவை கல்லூரி கலையரங்கில் நடத்தியது. நிகழ்ச்சியில் கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ் த.இ.செ.பத்ஹ_ர் ரப்பானி தொடக்க உரையாற்றினார். முனைவர் ஹச். செய்யது உதுமான் மேனாள் துணைவேந்தர் மக்கேனி அறிவியல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்> கிழக்கு ஆப்பிரிக்கா. அவர்கள் முன்னிலை உரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் சே.மு. அப்துல் காதர் வாழ்த்துரையாற்றினார். தமிழ்த் துறைத் தலைவர் ச.மகாதேவன் வரவேற்புரையாற்றினார். முனைவர் ஜாகிர் உசேன் இணைப் பேராசிரியர், அரபுத்துறை> சென்னை பல்கலைக்கழகம்> அவர்கள் தமிழ் மொழியில் உள்ள பாரதியார் பாடல்களையும் ஒளவையார் ஆத்திச்சூடிகளையும் அரபு மொழியில் மொழி பெயர்த்து புத்தகங்களை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்கள். துணை முதல்வர் எஸ்.எம்.ஏ. செய்யது முகம்மது காஜா அனைவருக்கும் நன்றி கூறினார்.

தமிழ்ப் படைப்பிலக்கியப் பயிலரங்கு ஒருபக்க அறிக்கை

பாளை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த் துறை சார்பாக 28.3.2023 காலை 10 மணியளவில் கல்லூரிக் கலையரங்கில் தமிழ்ப் படைப்பிலக்கியப் பயிலரங்கு நடைபெற்றது. தமிழ்த் துறைத் தலைவர் டாக்டர் ச.மகாதேவன் வரவேற்றுப் பேசினார். கல்லூரி முதல்வர் டாக்டர் சே.மு. அப்துல் காதர்> துணை முதல்வர் டாக்டர் எஸ்.எம்.ஏ.செய்யது முகமது காஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சங்கத் தமிழ் நூலைக் கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ் த.இ.செ. பத்ஹ{ர் ரப்பானி வெளியிட்டு தொடக்க உரையாற்ற சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் வண்ணதாசன் அதன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். பிரபல நாவலாசிரியரும் கோயம்புத்தூர் குமரகுரு கல்லூரித் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் சு.வேணுகோபால் சிறப்புரையாற்றும் போது "செல்பேசியை விட்டு வெளியேவாருங்கள் மாணவர்களே எழுதத் தொடங்குங்கள்” என்றார். அமர்வு-இரண்டில் திருநெல்வேலி எழுத்தாளர்களின் நிலவியல் பதிவுகள் எனும் தலைப்பில் கோயம்புத்தூர் குமரகுரு கல்லூரித் தமிழ்த் துறை உதவிப்பேராசிரியர் ப.சுடலைமணி பேசும்போது படைப்பாளிகள் படைத்த படைப்பின் இடம் படைப்பின் முக்கியப் பகுதியாக அமைகிறது. புதுமைப்பித்தன் 82 ஆண்டுகளுக்கு முன்னால் பேராச்சியம்மன் கோவில் குறுக்குத்துறை முருகன் கோவில் படித்துறையைப் பற்றி எழுதினார். நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட படைப்பாளர்களின் படைப்பு வெளிகளான குறுக்குத்துறை> பேராச்சி அம்மன் கோவில்> டவுண் ரதவீதி> ரெய்னீஸ் ஐயர் தெரு> ராஜவல்லிபுரம்> செப்பறைக்கோவில்> ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று அவ்விடங்களில் சிறப்பு விருந்தினர்களுடன் கலந்துரையாடினார். அரசு உதவி பெறாப் பாடங்களின் தமிழ்த் துறைத் தலைவர் சாதிக் அலி அனைவருக்கும் நன்றி கூறினார்.

பாளை> கல்லூரியில் சிறப்புச் சொற்பொழிவு 13.04.2023

பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் தமிழ்த்துறை சார்பாகச் சிறப்புச் சொற்பொழிவு (13.4.2023) அன்று பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் சே.மு. அப்துல் காதர் அவர்கள் தலைமை உரையாற்றினார். துணை முதல்வர் முனைவர் ச.மு.அ. செய்யது முகமது காஜா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். ம.தி.தா. இந்துக் கல்லூரியின் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் முனைவர் கருப்பையா அவர்கள் "தமிழ் நாடக வெளி - வேர்களும் விழுதுகளும்" என்னும் பொருண்மையில் சிறப்புரையாற்றினார். அவர் தன்னுடைய சிறப்புரையில் நாடகத்தின் தோற்றம், வளர்ச்சி, நாடகத்தின் உத்திகள், கதை மாந்தர்கள், கதை வெளிகள், போன்றவற்றை மாணவர்களுக்குப் புரியும் வண்ணம் எடுத்துரைத்தார். முன்னதாகத் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் முனைவர் அ.மு.அயூப்கான் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். முனைவர் அனுசுயா நன்றி கூறினார். நிகழ்ச்சியை அரசுதவிப் பெறா தமிழ்த்துறைத் தலைவர் திரு. சாதிக் அலி அவர்கள் பேராசிரியர்கள் முனைவர் மாலிக், முனைவர் அந்தோணி சுரேஷ், முனைவர் பொன் சக்தி கலா, முனைவர் ஆமினா பானு, முனைவர் பாத்திமா ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.

வாவு அறக்கட்டளைச் சொற்பொழிவு 25.04.2023

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் தமிழ்த் துறை 25.04.2023 அன்று பிற்பகல் 2:30 மணிக்கு வாவு அறக்கட்டளைச் சொற்பொழிவை கல்லூரிக் கலையரங்கில் நடத்தியது. நிகழ்ச்சியில் கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ் த.இ.செ.பத்ஹ_ர் ரப்பானி தொடக்க உரையாற்றினார். அல்ஹாஜ் வாவு.எஸ்.செய்யது அப்துர் ரஹ்மான் அவர்கள் முன்னிலை உரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் சே.மு. அப்துல் காதர் வாழ்த்துரையாற்றினார். தமிழ்த் துறைத் தலைவர் ச.மகாதேவன் வரவேற்புரையாற்றினார். சென்னை> மேனாள் சட்டமன்ற உறுப்பினர்> நற்றமிழ் நாவலர் திரு.பழ.கருப்பையா அவர்கள் “இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். துணை முதல்வர் எஸ்.எம்.ஏ. செய்யது முகம்மது காஜா அனைவருக்கும் நன்றி கூறினார்.

ஹாஜி எல்.கே.எஸ்.மீரான் முஹைதீன் தரகனார் அறக்கட்டளைச் சொற்பொழிவு 02.05.2023

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் தமிழ்த் துறை 02.05.2023 அன்று முற்பகல் 10:30 மணிக்கு ஹாஜி எல்.கே.எஸ்.மீரான் முஹைதீன் தரகனார் அறக்கட்டளைச் சொற்பொழிவை கல்லூரிக் கலையரங்கில் நடத்தியது. நிகழ்ச்சியில் கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ் த.இ.செ.பத்ஹ{ர் ரப்பானி தலைமை உரையாற்றினார். அல்ஹாஜ் வாவு.எஸ்.செய்யது அப்துர் ரஹ்மான் அவர்கள் முன்னிலை உரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் சே.மு. அப்துல் காதர் வாழ்த்துரையாற்றினார். ஆட்சிக்குழு உறுப்பினரான ஜனாப் எல்.கே.எம்.ஏ. முஹம்மது நவாப் ஹ{சேன் வரவேற்புரையாற்றினார். பேராசிரியர் ஜவாஹிருல்லர் சென்னை, பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், அவர்கள் “இஸ்லாமியப் பொருளாதாரம்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். ஹாஜி. எல்.கே.எஸ் மீரான் முஹைதீன் அனைவருக்கும் நன்றி கூறினார்.


Back to Top