திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் தமிழ்த்துறை சார்பாக இன்று 02.08.2023 மாலை 3:30 மணிக்குத் தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் சே.மு. அப்துல்காதர் தலைமை உரையாற்றினார். கல்லூரி துணை முதல்வர் முனைவர் ச.மு.அ. செய்யது முகம்மது காஜா வாழ்த்துரை வழங்கினார். துபாய் பன்னாட்டு நிறுவன மூத்த தரக்கட்டுப்பாட்டு மேலாளர் திரு ரவி சொக்கலிங்கம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு “தமிழால் இணைவோம்” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். அரசு உதவி பெறாப் பாடங்களின் தமிழ்த் துறை தலைவர் முனைவர் மு.சாதிக் அலி அனைவரையும் வரவேற்றார். தமிழ்த் துறைப் பேராசிரியர் முனைவர் அனுசுயா நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளைத் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் தமிழ்த் துறை 21.09.2023 அன்று பிற்பகல் 3:30 மணிக்கு மாணவர் வாசகர் வட்டம் தொடக்கவிழா கல்லூரிக் கலையரங்கில் நடத்தியது. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் சே.மு. அப்துல் காதர் தலைமையுரையாற்றினார். அரசுதவி பெறாத் தமிழ்த் துறைத் தலைவர் மு.சாதிக் அலி வரவேற்புரையாற்றினார். துணை முதல்வர் எஸ். எம் ஏ. செய்யது முகம்மது காஜா அவர்கள் வாழ்த்துரையாற்றினார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர். ச.மகாதேவன் அவர்கள் வாழ்த்துரையாற்றினார். திருச்சிராப்பள்ளி> பாராதிதாசன் பல்கலைக்கழகம் தமிழ்த்துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர் உ.அலிபாவா அவர்கள் “தமிழ் ஆய்வின் அண்மைக்காலப் போக்குகள்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். முனைவர் ஞா.அந்தோணி சுரேஷ் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.
திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி தமிழ்த்துறை சார்பில் உமறுப்புலவர் பிறந்த நாள் மற்றும் பொன்விழா கருத்தரங்கு 15.12.2023 அன்று காலை 11.00 மணியளவில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் சே.மு அப்துல் காதர் தலைமை வகித்தார். தமிழ்த் துறைத்தலைவர் முனைவர் ச.மகாதேவன் அறிமுக உரையாற்றினார். துணை முதல்வர் ச.மு.அ செய்யது முகமது காஜா வாழ்த்தி பேசினார். உமறுப்புலவரின் உவமை நயம் என்னும் தலைப்பில் பேராசிரியர்கள் மு.சாதிக் அலி> அபுல் ஹசன்> ஆகியோரும் “சீறாப்புராண வர்ணனைகள்” எனும் தலைப்பில் முனைவர்கள் இரா. அனுசியா மாலிக் ஆகியோரும்> “உமறுப்புலவரும் மாஞானி சதக்கத்துல்லாஹ் அப்பாவும்” எனும் தலைப்பில் முனைவர் பாத்திமா ஆகியோர் ஆய்வு உரையாற்றினர். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் சேக் சிந்தா அனைவருக்கும் நன்றி கூறினார்.
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் தமிழ்த் துறை 14.12.2023 அன்று பிற்பகல் 2:00 மணிக்கு மாணவர் வாசகர் வட்டம் தொடக்கவிழா கல்லூரிக் கலையரங்கில் நடத்தியது. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் சே.மு. அப்துல் காதர் தலைமையுரையாற்றினார். உதவி பேராசியர் அ.சே.சேக் சிந்தா வரவேற்புரையாற்றினார். துணை முதல்வர் எஸ்.எம்ஏ. செய்யது முகம்மது காஜா அவர்கள் வாழ்த்துரையாற்றினார். திரு. செல்வன் வட்டாட்சியர் பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் எழுத்தாளர் திரு.இரா.நாறும்பூநாதன் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். அரசு உதவி பெறாப பாடங்கள் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் மு.சாதிக் அலி அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.