1971 இல் தொடங்கப்பட்ட சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறை, மாணவர்களின் மொழியாற்றலையும் படைப்பாற்றலையும் வளர்ப்பதற்கு அரைநூற்றாண்டுகளாகப் பாடுபட்டுவருகிறது.
சீதக்காதி தமிழ்ப்பேரவையின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் மாணவர்களுக்குக் கவியரங்குகளையும் பட்டிமண்டபங்களையும் நடத்தித் தமிழ் உணர்வை மாணவர்களுக்கு ஊட்டிவருகிறது.
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தக்குடி. என்கிறார் ஐயனாரிதனார். அத்தகு பெருமை வாய்ந்த தமிழ் மொழியை முதன்மைப் பாடமாக நம் கல்லூயில் தொடங்க வேண்டும் என்ற நம் கல்லூரித் தாளாளர் அவர்களின் விருப்பப்படி 2016ம் ஆண்டில் நம் கல்லூரியில் இளங்கலைத் தமிழ் தொடங்கப்பட்டது
நல்ல மாணவர்களை, நாவலர்களை படைப்பாளர்களை உருவாக்குவது இத்துறையின் நோக்கமாகும். இதனடிப்படையில் சாகித்ய அகாடமி போன்ற உயர்ந்த விருது பெற்ற மற்றும் பிற விருதுகள் பெற்ற படைப்பாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் போன்றவர்களுடன் மாணவர்கள் நேரடியாக கலந்துரையாடும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மேலும் மாணவர்கள் தங்களின் திறன்களை வளர்த்துக் கொள்ளும் வகையில் மாணவர் வாசகர் வட்டம், பட்டிமன்றம், கருத்தரங்கம், பயிலரங்கம், கவியரங்கம் போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. மாணவர்களை மையமிட்டு அவர்களின் திறன்களை வளர்க்கும் வகையில் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மொழிப்பாடம் பயிலும் மாணவர்களுக்கென்றே சிறப்பான மொழி ஆய்வகம் (Language lab) செயல்படுகிறது. மற்றும் மாணவர்களின் வேலை வாய்ப்பை கருத்தில் கொண்டு மொழிப்பாடத்துடன் கணினியும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. தமிழ்த்துறையின் மூலம் இதழியல் துறையில் பட்டயச் சான்றிதழ் வகுப்புகளும் (Diplomo in Journalism) நடத்தப்படுகின்றன. இவ்வகுப்பில் பயின்ற பல மாணவர்கள் ஊடகத் துறையில் பயணித்து கொண்டிருக்கின்றனர். மேலும் ஜெர்மன் தமிழ் மரபு அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம். அதனடிப்படையில் தமிழ் மரபுகளை ஆவணப்படுத்துதல் தொடர்பான பயிற்சிகள் மாணவர்களுக்கு கற்றுத் தரப்படுகின்றன. மேலும் வலைப்பூக்கள் (blogspot) உருவாக்குவதற்கும் இணையத்தில் தொடர்ந்து எழுதுவதற்கும் மாணவர்களுக்கு கற்றுத் தரப்படுகின்றன. நம் கல்லூரியில் இளங்கலைத் தமிழ் பயிலும் மாணவர்கள் உயர் கல்வியான முதுகலைத் தமிழ் மற்றும் முனைவர் பட்டப் படிப்புகளையும் கல்லூரியிலேயே படிக்க வேண்டும் என்று கருதிய நம் கல்லூரியின் ஆட்சிக்குழு நம் கல்லூரியில் முதுகலைத் தமிழ் (M.A. Tamil) மற்றும் முனைவர் பட்டபடிப்பு (Ph.D. in Tamil) தொடங்க வேண்டும் என்று அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. மாணவர்களின் படைப்புத்திறனை வெளிக்கொணரும் பொருட்டு மாணவர்கள் மட்டுமே எழுதிய கவிதைத் தொகுப்பு ஒவ்வொரு ஆண்டும் மாணவர் பேரவை மற்றும் தமிழ்த்துறையால் வெளியிடப்படுகிறது.
பேராசிரியர்கள் | கல்வித் தகுதி | பணிக்குச் சேர்ந்தநாள் | பணியனுபவம் | எழுதிய நூல்கள் | பதிப்பித்த நூல்கள் | காணோலித் தடம் |
---|---|---|---|---|---|---|
முனைவர் ச.மகாதேவன், தமிழ்த்துறைத் தலைவர் மற்றும் இணைப் பேராசிரியர் | MA, M.Phil, Ph.D, UGC NET | 10.07.1998 | 22 ஆண்டுகள் | பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், வண்ணதாசன், இறையருட்கவிமணி பேராசிரியர் கா.அப்துல் கபூர், காலத்தின் குரல், தண்ணீர் ஊசிகள், வாழ நினைத்தால் வாழலாம். | 24 | மகா தமிழ் |
முனைவர் அ.மு.அயூப்கான், இணைப் பேராசிரியர் | MA,M.Phil,B.Ed. Ph.D, | 22.12.1999 | 21 ஆண்டுகள் | 24 | ||
முனைவர் அ.சே.சேக் சிந்தா, உதவிப் பேராசிரியர் | M.A(Tamil), M.A(Linguistics),M.Phil,PGDCA, Ph.D | 22.08.2007 | 13 ஆண்டுகள் | தேம்பாவணியில் உயிரினங்களும் பயிரினங்களும், தேம்பாவணி | 24 |
பகுதி ஒன்று தமிழ் நடத்துவதோடு 2004 ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழக நிதிநல்கைக்குழுவின் நிதியுதவியோடு தமிழ் இதழியல் சான்றிதழ் வகுப்புகளைத் தமிழ்த்துறை நடத்திவருகிறது. இவ்வகுப்பில் பயின்ற பலர் விகடன் மாணவர் செய்தியாளர் திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழகத்தின் பிரபல காட்சி ஊடகங்களிலும் அச்சு ஊடகங்களிலும் ஊடகவியலாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.
தன்னாட்சி பெற்ற பின்பு காலமாற்றத்திற்கு ஈடுகொடுக்கும் புதிய பாடத்திட்டங்களை வகுத்து அதற்குரிய பாடநூல்களை பைந்தமிழ், இணையத் தமிழ், செந்தமிழ், சிறுகதைக் களஞ்சியம், தீந்தமிழ், இன்பத் தமிழ், சமயத் தமிழ், பயன்பாட்டுத்தமிழ், சங்கத் தமிழ் எனும் தலைப்பில் மாணவர்களுக்கு வழங்கிவருகிறது.
மாணவர்களின் சிறந்த புதுக்கவிதைகள் தொகுக்கப்பட்டு ஆறாம்விரல், கானல் மீன்கள், மனத்துளி, இமைச்சிறை, கவிப்புறா, காலநதி எனும் தலைப்பில் தமிழ்த் துறையால் கவிதைத் தொகுப்புகளாகத் தொகுக்கப்பட்டு தொடர்ந்து ஆறுஆண்டுகளாக வெளியிடப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் வாவு அறக்கட்டளையின் மூலம் வலிமார்களின் கோமான் ஞான மாமேதை அப்துல் காதர் ஜிலானி அவர்களின் வாழ்வு குறித்தும், எழுத்தோவியங்கள் குறித்தும், சதாவதானி செய்குதம்பிப் பாவலர் அறக்கட்டளையின் மூலம் இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் குறித்தும், அல்ஹாஜ் எல்.கே.எஸ். முஹமது மீரான் தரகனார் அறக்கட்டளையின் மூலம் இஸ்லாமியச் சட்டங்கள் குறித்த அறக்கட்டளைச் சொற்பொழிவையும் தமிழ்த்துறை சிறப்பாக நடத்திவருகிறது. காவன்னா முகமது உம்மா அறக்கட்டளையின் சார்பில் நபிகள் பெருமானார் குறித்த மாநில அளவிலான கட்டுரைப்போட்டியை ஆண்டுதோறும் துறை நடத்திவருகிறது.
மாணவ மாணவியருக்கு நூல்கள் வாசிக்கும் பழக்கம் வரவேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாதமும் முதல் திங்கள்கிழமை மாணவர் வாசகர் வட்டத்தைத் தமிழ்த்துறை நடத்திவருகிறது.
சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்களான தி.க.சிவசங்கரன், தோப்பில் முகமது மீரான், கவிக்கோ அப்துல் ரகுமான், பொன்னீலன், நாஞ்சில்நாடன், வண்ணதாசன், சோ.தர்மன் ஆகியோரைக் கருத்தரங்குகளுக்கு அழைத்து மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்களின் சிறந்த படைப்புகளை மாணவர்களுக்குப் பாடமாய் நடத்திவருகிறது.
2009 ஆண்டிலிருந்து 2020 ஆண்டுவரை மாநில,தேசிய,பன்னாட்டு அளவில் 13 கருத்தரங்குகளைத் துறை ஒவ்வோர் ஆண்டும் நடத்திவருகிறது. தமிழ் மரபு அறக்கட்டளையோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு மூன்று பன்னாட்டுக் கருத்தரங்குகளை நடத்திவருகிறது.
1 | தமிழ் இலக்கியத்தில் அன்பு நெறி | தேசியக் கருத்தரங்கம் | 17.03.2009 |
2 | வண்ணதாசனின் படைப்பிலக்கியங்கள் | மாநிலக் கருத்தரங்கம் | 03.08.2020 |
3 | இணையத் தமிழின் இக்காலப் போக்குகள் | தேசியக் கருத்தரங்கம் | 01.02.2011 |
4 | தமிழ் இலக்கியத்தில் மதுஒழிப்புச் சிந்தனைகள் | தேசியக் கருத்தரங்கம் | 29.01.2013 |
5 | தமிழ் இலக்கியத்தில் மனிதநேயச் சிந்தனைகள் | தேசியக் கருத்தரங்கம் | 10.03.2015 |
6 | தமிழ் ஓலைச் சுவடிகள் பாதுகாப்பும் இணையத்தில் ஆவணப்படுத்துதலும் | தேசியப் பயிலரங்கம், | 29.09.2015 |
7 | தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கைச் சிந்தனைகள் | தேசியக் கருத்தரங்கம் | 27.06.2016 |
8 | தமிழ் மரபுகளை ஆவணப்படுத்துதல் | பன்னாட்டுக் கருத்தரங்கம் | 27.12.2016 |
9 | எதிர்காலத் தமிழ் | தேசியக் கருத்தரங்கம் | 19.12.2017 |
10 | சாகித்ய அகாதமி உரையரங்கம் | சமயமும் இலக்கியமும் | 28.08.2018 |
11 | தமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள் | பன்னாட்டுக் கருத்தரங்கம் | 18.12.2018 |
12 | தொல்லியல் நோக்கில் உலகத் தமிழர் பண்பாடு | பன்னாட்டுக் கருத்தரங்கம் | 04.10.2019 |
13 | தமிழால் இணைவோம் | பன்னாட்டு இணைய வழிக்கருத்தரங்கம் | 1.06.2020 to 03.06.2020 |
இக்கருத்தரங்க நிகழ்வுகள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதோடு ஆய்வுக்கோவைகளாகப் பன்னாட்டு நூற் குறியீட்டு எண்ணுடன் பொருநைத் தமிழ், இளந்தமிழ், அமுதத்தமிழ், மனிதநேயத் தமிழ், மரபுத்தமிழ், தன்னம்பிக்கைத் தமிழ், எதிர்காலத் தமிழ், தொல்தமிழ், அறிவியல் தமிழ் எனும் தொகுதிகளாகத் தமிழ்த்துறையால் வெளியிடப்பட்டுள்ளன.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஒப்புதல் பெற்ற நெறியாளர்களாகத் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் ச.மகாதேவன் அவர்களும், தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் அ.சே.சேக்சிந்தா அவர்களும் ஆய்வு மாணவர்களுக்கு ஆய்வு வழிகாட்டியாக நெறிப்படுத்துகிறார்கள். முனைவர் ச.மகாதேவன் தூத்துக்குடி ஏ.பி.சி மகாலெட்சுமி மகளிர் கல்லூரி, திருநெல்வேலி தூய சவேரியார் கல்லூரி, ம.திதா இந்துக் கல்லூரி, சாராள் தக்கர் மகளிர் கல்லூரி, குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி எனும் கல்லூரிகளின் தமிழ்த்துறை ஆய்வு மையங்களின் முனைவர் பட்ட வழிகாட்டும் குழு உறுப்பினராக ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டிவருகிறார்.
பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் குறுஆய்வுத்திட்ட நிதியுதவியில் (பத்தாவது திட்டகாலம்) தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் ச.மகாதேவன், வண்ணதாசன் படைப்பிலக்கியங்களில் இயற்கை எனும் தலைப்பில் ரூ 65,000 நிதியுதவியைப் பெற்று (செப்டம்பர், 2009 – மார்ச் 2011) ஆய்வுத் திட்டம் வெற்றிகரமாக நிறைவுசெய்யப்பட்டு பல்கலைக்கழக நிதிநல்கைக்குழுவிடம் அளிக்கப்பட்டது. இதேதிட்ட காலத்தில் இத்துறையின் இணைப்பேராசிரியர் முனைவர் அ.மு.அயூப்கான், தமிழ் நாளிதழ்களில் செய்தி உத்திகள் எனும் தலைப்பில் ரூ 90,000 நிதியுதவியைப் பெற்று (செப்டம்பர், 2009 – மார்ச் 2011) ஆய்வுத் திட்டம் வெற்றிகரமாக நிறைவுசெய்யப்பட்டு பல்கலைக்கழக நிதிநல்கைக்குழுவிடம் அளிக்கப்பட்டது. இத்திட்ட ஏடுகள் இன்பிலிப்நெட் தளத்தில் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவால் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.